கூட்டுறவு சங்கங்கள் சார்பில் நடந்த சிறப்பு கடன் மேளாவில 453 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி கடனுதவி

திருப்பத்தூரில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் நடந்த சிறப்பு கடன் மேளாவில 453 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2023-08-26 14:15 GMT

திருப்பத்தூரில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் நடந்த சிறப்பு கடன் மேளாவில 453 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கடன் மேளா நடைபெற்றது. திருப்பத்தூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சி.பெ.முருகேசன் வரவேற்று பேசினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யா சதீஷ், மாவட்ட குழு உறுப்பினர் கவிதா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக சி.என்அண்ணாதுரை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் தேவராஜி, நல்லதம்பி கலந்து கொண்டு சிறப்பு கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்து 453 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர்கள் தர்மேந்திரன், சண்முகம், மோகன், பூவண்ணன், ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், சென்னம்மாள், சித்ரா, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் ஜெய்சங்கர், உதவி பொதுமேலாளர்கள் தூயவன், ரவிச்சந்திரன், திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாளர் தண்டபாணி மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்கங்களின் துணைபதிவாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்