சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-10-27 00:15 IST

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருஉத்தரகோசமங்கை சாலை கருவேலங்காட்டு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கமுதி குண்டாறு பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 53), கீழக்கரை புதுகிழக்கு தெரு அகமது கனி (45), கிழக்கு தெரு ஜமால் முகமது (54), பெரியபட்டினம் பிலால்நகர் சலீல்கான் (54) ஆகியோர் என தெரியவந்தது. பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.36 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்