தூக்கில் பிணமாக தொங்கிய 3-ம் வகுப்பு மாணவி: விளையாட்டு விபரீதமானதா..? போலீசார் விசாரணை

சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2024-05-12 02:50 IST

கோப்புப்படம்

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட நந்தீஸ்வரர் காலனி 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரபு. தனியார் ஆஸ்பத்திரியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஹன்சிகா (வயது 9). நந்திவரம் அரசு ஆரம்ப பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மதியம் ஹன்சிகா வீட்டில் கட்டில் மீது பிளாஸ்டிக் நாற்காலி போட்டு அதன் மீது ஏறி மின் விசிறியில் துப்பட்டா துணியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதை பார்த்த அவரது 4 வயது உடைய தங்கை கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஹன்சிகாவை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த சிறுமி ஹன்சிகா விளையாட்டாக மின்விசிறியில் துப்பட்டாவை மாட்டி தனது தங்கையுடன் விளையாடி கொண்டிருந்தபோது கழுத்தில் துப்பட்டா இறுக்கியதால் உயிரிழந்தாரா? அல்லது சிறுமி தூக்குப்போட்டுக் கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்