அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை அன்னதானத்திற்கு 30 டன் மளிகை பொருட்கள்

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை அன்னதானத்திற்கு 30 டன் மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2022-12-13 19:21 GMT

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விழா காலங்களில் கார்த்திகை 1-ந்தேதி முதல் 70 நாட்கள் அன்னதானம் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கடந்த 25 ஆண்டுகளாக ஆண்டுதோறும் டிசம்பர் 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அய்யப்பன் சன்னிதானத்திலும், டிசம்பர் 31-ந்தேதி பம்பைநதி அருகிலும் என 7நாட்கள் அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அன்னதானம் செய்ய அன்னதான கமிட்டி மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் 40 பேர் ஸ்ரீரங்கத்தில் இருந்து 30 டன் மளிகை பொருட்களுடன் 4 லாரிகளில் நேற்று புறப்பட்டனர். சேவா சங்க புரவலர் முரளி கொடியசைத்து 4 லாரிகளையும் அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்