தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-21 15:57 GMT

பேரணாம்பட்டு டவுன் புத்துக்கோயில்- வீ.கோட்டா ரோடு சந்திப்பு சாலையில் நேற்று காலை பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்தவழியாக 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் 3 பேரும் மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரையும் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பேரணாம்பட்டு அடுத்த பரவக்கல் கிராமம் பனந்தோப்பு காலனியை சேர்ந்த சீனிவாசன் (வயது 22), ரமாபாய் நகரைச் சேர்ந்த பிரதீப் (21), பரவக்கல் கிராமம் புதுமனையை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பது தெரிய வந்தது.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து பேரணாம்பட்டு, மேல்பட்டி, குடியாத்தம் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து மோட்டார்சைக்கிள்களை திருடி சாராயம் கடத்துவதற்காக சாராய வியாபாரிகளிடமும், மற்றவர்களிடமும் குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். கட்டிட மேஸ்திரியான ஆறுமுகம் கட்டிட வேலைக்கு செல்லும் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு திருடி வந்துள்ளார்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 20 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சீனிவாசன், பிரதீப், ஆறுமுகம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்