மது விற்ற 3 பேர் சிக்கினர்

மது விற்ற 3 பேர் சிக்கினர்

Update: 2023-01-16 18:45 GMT


நெகமம்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. இதையடுத்து நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் மற்றும் போலீசார் நெகமம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். கரப்பாடி பிரிவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறம் அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மதுரையை சேர்ந்த விக்னேஷ் (வயது 27) என்பவரை அதிக விலைக்கு மதுவிற்றதாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 44 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர், இதேபோல் நெகமம் -ரங்கம்புதூர் ரோட்டில் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த ரியாஸ்கன் (33) என்பவர் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 18 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். வடசித்தூர் -கிணத்துக்கடவு ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்த வீரமணி (27) என்பவரை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்