கழிவறையில் மின்சாதன பொருட்கள் திருடிய 3 பேர் கைது
கழிவறையில் மின்சாதன பொருட்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சமயபுரம்:
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள கழிவறையில் வயர், பல்புகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை 3 பேர் திருடினர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், 3 பேரையும் பிடித்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணத்தை அடுத்த அழகன்குளம் அருகே உள்ள சோகையான் தோப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜான்டேவிட்(வயது 30), விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த கதிரேசனின் மகன் குமார்(29), ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சங்கரன்(28) என்பது தெரியவந்தது. மேலும் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் குமார் மீது திருட்டு வழக்கு உள்ளதும், ஜான்சன்டேவிட் சமயபுரம் பழைய பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நிறுத்தி இருந்த லாரியில் டயர் திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் கைது செய்தார்.