சாராயம் விற்ற 3 பேர் கைது
மயிலாடுதுறை பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்
மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை அய்யனார் கோவில் அருகில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மயிலாடுதுறை சேந்தங்குடி கால்டெக்ஸ் பகுதியை சேர்ந்த குருநாதன் மகன் பாபு (வயது 24) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாபுவை கைதுசெய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல மயிலாடுதுறை அருகே மொழையூர் கிராமத்தில் சாராயம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (50), மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி கிராமத்தில் சாராயம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சக்கரை என்கிற சார்லஸ் (30) ஆகிய 2 பேரை பெரம்பூர் போலீசார் கைது செய்தனர்.