மதுரை ஐகோர்ட்டில் ஆவணங்கள் திருடிய ஊழியர் உள்பட 3 பேர் கைது
மதுரை ஐகோர்ட்டில் ஆவணங்கள் திருடிய ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை ஐகோர்ட்டில் ஆவணங்கள் திருடியதாக ஐகோர்ட்டு ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-
ஆவணங்கள் மாயம்
மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் தனித்தனி அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ஒரு வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் கடந்த மாதம் காணாமல் போனதாக அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், ஐகோர்ட்டு பதிவாளரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஐகோர்ட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
3 பேர் கைது
இதுகுறித்து போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஐகோர்ட்டு ஊழியரான ஜான்சன் மற்றும் அவருக்கு உடந்தையாக பாலமுருகன், பிரித்திவிராஜ் ஆகியோர் இருந்து அந்த ஆவணங்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.