செம்மண் கடத்த முயற்சி சிறுவன் உள்பட 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி அருகே செம்மண் கடத்த முயற்சி சிறுவன் உள்பட 3 பேர் கைது பொக்லைன் எந்திரம், 2 டிராக்டர்கள் பறிமுதல்

Update: 2023-07-06 18:30 GMT

தியாகதுருகம்

கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் பகுதியில் கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலைக்கோட்டாலம் கருப்பனார்கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டர்களில் செம்மண் அள்ளிக்கொண்டிருந்ததை பார்த்தனர். பின்னர் அருகில் சென்று விசாரித்தபோது செங்கல் சூளைக்காக செம்மண்ணை கடத்தி செல்ல இருந்தது தொியவந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பொக்லைன் எந்திர ஆபரேட்டர் அழகாபுரம் கிராமத்தை சேர்ந்த ராசு மகன் ஆரோக்கியதாஸ்(வயது 30), டிராக்டர் டிரைவர்கள் தண்டலை கிராமம் ரமேஷ்(44), மலைக்கோட்டாலம் சேர்ந்த 16 வயது சிறுவன், டிராக்டர் உரிமையாளர் மணி, பொக்லைன் எந்திர உரிமையாளர் சின்னையன் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆரோக்கியதாஸ், ரமேஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து பொக்லைன் எந்திரம், 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு 16 வயது சிறுவனை ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்