ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் சிக்கினர்

ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-09 19:52 GMT

நெல்லை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று மூலைக்கரைப்பட்டி- கூந்தன்குளம் ரோடு சந்திப்பு இசக்கியம்மன் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் 300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நாங்குநேரி அருகே பட்டப்பிள்ளைபுதூரை சேர்ந்த சங்கர் (வயது 45) என்பவரை கைது செய்து, ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று விக்கிரமசிங்கபுரம்- ஆலங்குளம் ரோட்டில் அரசு ஐ.டி.ஐ. அருகில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த தென்காசி மாவட்டம் மேலபட்டமுடையார்புரத்தை சேர்ந்த துரைசாமி மகன் மாரிசெல்வம் (29), காசி மகன் மாரிசெல்வன் (36) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்