ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது

ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-01 10:57 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவுக்கரசி (வயது 42). களியனூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது கணவர் ஆறுமுகம் (48). டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 22-ந்தேதி காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு களியனூரில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஆறுமுகத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். படுக்காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் வாலாஜாபாத் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வையாவூர் பகுதியை சேர்ந்த கட்டிட வேலை செய்யும் சந்தோஷ் (வயது 24) கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிறை செல்ல ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஆறுமுகம் காரணமாக இருந்துள்ளார் என்பதும் இதன் காரணமாக ஆதிசங்கரர் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவர், நசரத்பேட்டையை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவர் ஆகியோர் துணையுடன் தாக்கியது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்