ராணுவ வீரரை தாக்கிய 3 பேர் கைது

நெல்லையில் ராணுவ வீரரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-07 22:31 GMT

பேட்டை:

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்தவர் செல்வம் மகன் மாரியப்பன் (வயது 30). ராணுவ வீரரான இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் நெல்லையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

நெல்லை கோடீஸ்வரன் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள், மாரியப்பன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாரியப்பனுக்கும், விபத்து ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து மாரியப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்