சேந்தமங்கலம்:-
சேந்தமங்கலம் அருகே பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 40), மளிகை வியாபாரி. இவருக்கு சொந்தமான காருக்கு மர்மநபர்கள் தீ வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பேளூக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காருக்கு தீ வைப்பு சம்பவம் தொடர்பாக கோபாலகிருஷ்ணனின் முன்னாள் பங்குதாரரான பாலமுருகன் (43) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக பாலமுருகன், அவருடைய நண்பர்கள், பள்ளிப்பட்டியை சேர்ந்த சூர்யா (21),, சசிகுமார் (28) ஆகியோருடன் சேர்ந்து காருக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து பேளூக்குறிச்சி போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.