இன்னும் 3 மாதத்தில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை

இன்னும் 3 மாதத்தில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம்தென்னரசு கூறினார்.

Update: 2023-03-14 19:36 GMT

காரியாபட்டி, 

இன்னும் 3 மாதத்தில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம்தென்னரசு கூறினார்.

கடன் தள்ளுபடி சான்றிதழ்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் கூட்டுறவுத்துறை சார்பில் சுய உதவிக்குழுவினருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய கடன்கள் வழங்கும் விழா அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இதில் 179 மகளிர் குழுக்களை சேர்ந்த 1777 பேருக்கான கடன்தொகை ரூ.3 கோடியே 5 ஆயிரம் மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றிதழை சுய உதவிக்குழு பெண்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

இன்னும் 3 மாதத்தில்

மகளிருக்கான உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், இதே போன்று, இன்னும் 3 அல்லது 4 மாதத்தில் வழங்கக்கூடிய நாள் வரும். இந்த மண்ணில் பெண்ணாக பிறந்ததற்காக உரிமை தொகை ரூ.1,000 இன்னும் மூன்றே மாதத்தில் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ரூ.32 கோடிக்கான சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான தொழில்கள் விருதுநகர் மாவட்டத்துக்கு கொண்டுவரப்படுகின்றன. பொருளாதாரத்தில் இந்தியாவில் 2-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடியது விவசாயம். எனவே விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அதிகம் ஏற்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் செந்தில்குமார், பேரூராட்சி தலைவர்கள் செந்தில், துளசிதாஸ், காரியாபட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, தி.மு.க. பிரமுகர் வாலை முத்துசாமி, முன்னாள் நகர செயலாளர் தங்கபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பர பாரதி சேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், சங்கரேசுவரன், மாவட்ட பிரதிநிதி சங்கர பாண்டியன், ஒன்றிய பிரதிநிதி கல்யாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்