மன்னார்குடி கீழபாலம் அருகே முத்துபேட்டை சாலையில் உள்ள அய்யனார் கோவிலில் தீபாய்ந்த அம்மன் சன்னதி உள்ளது. நேற்று மாலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மன் சன்னதி அருகே பெட்டி ஒன்று இருப்பதை பார்த்தனர். சந்தேகமடைந்த பக்தர்கள் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பெட்டியை திறந்து பார்த்த போது, அதில் சாமிக்கு உடுத்தும் ஆடைகளும், உலோகத்தால் ஆன 3 சாமி சிலைகளும் இருப்பது தெரியவந்தது. சுமார் 1 அடி உயரம் கொண்ட ஆண்டாள் சிலை ஒன்றும், சிறிய அளவிலான விநாயகர் மற்றும் அண்ணபூரணி அம்மன் சிலைகளும் இருந்தது. மூன்று உலோக சிலைகளையும் கைப்பற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள் தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.