பெண்ணிடம் 3¼ பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 3¼ பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2022-08-30 19:06 GMT

சங்கிலி பறிப்பு

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் சரகம் லெப்பைக்குடிகாட்டை அடுத்த சு.ஆடுதுறை கிராமத்தில் மீனவத்தெருவில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி சாந்தி (வயது 48). நேற்று காலை சாந்தி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று 100 நாள் வேலை திட்டத்தில் மராமத்து பணிக்கு தேவையான உபகரணங்களை எடுத்துக் கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அபராத ரட்சகர் கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் சாந்தியை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், திடீெரன சாந்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சாந்தி சங்கிலியை கைகளால் பற்றிக் கொண்டதால் சங்கிலி அறுந்து 3¼ பவுன் மர்ம நபர்கள் கையில் சிக்கியது.2 பவுன் கீழே விழுந்தது. அதனை சாந்தி எடுத்துக்கொண்டார். இதற்கிடையில் சாந்தியை அந்த மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சாந்திக்கு காயம் ஏற்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குபதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

நகை-பணம் திருட்டு

இதேபோல் பெரம்பலூர் ஆரோக்கிய நகர் பிரதான சாலையில் உள்ள ஜெனிபர் நகரில் வசித்து வருபவர் சரசு(53). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகள் லோகேஸ்வரி(19), ஒரு தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காைல லோகேஸ்வரி கல்லூரிக்கு சென்ற பின்னர், சரசு வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு தனது மாட்டை மேய்ப்பதற்காக அருகில் உள்ள வயலுக்கு சென்றார். இதனை நோட்டம் விட்ட மர்ம நபர்கள் சரசு வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கி வீட்டில் வைத்திருந்த அரை பவுன் கம்மல், ஜிமிக்கி மற்றும் ரூ.1,150 ஆகியவற்றை திருடிச்சென்றனர்.

மதியம் வீட்டிற்கு திரும்பி வந்த சரசு, வீட்டின் ஓடுகள் பிரிக்கப்பட்டு நகை, பணம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்