3 பணியாளர்கள் சஸ்பெண்டு

வீரவநல்லூர் பேரூராட்சியில் 3 பணியாளர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

Update: 2022-10-14 21:30 GMT

சேரன்மாதேவி:

பத்தமடை பேரூராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீரில் குளோரின் பவுடர் அதிகளவு கலந்து பொதுமக்கள் வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகமான அளவு குளோரின் பவுடர் கலக்கப்பட்டதால் குடிநீர் சிவப்பு நிறமாக மாறி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், பணியில் கவனக்குறைவாக இருந்த குடிநீர் பணியாளர்கள் மாதவன், ஆறுமுகவேல் மற்றும் அசன் மைதீன் ஆகிய 3 பேரை உதவி இயக்குனர் உத்தரவின் பேரில் செயல் அலுவலர் சஸ்பெண்டு செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்