ரூ.22 லட்சம் மோசடி செய்த 3 ஊழியர்கள் கைது

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் ரூ.22 லட்சம் மோசடி செய்த 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-05 20:34 GMT

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் ரூ.22 லட்சம் மோசடி செய்த 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரூ.22 லட்சம் மோசடி

மதுரை எஸ்.எஸ்.காலனி ராம்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல் அருள் ராயன் (வயது 54). இவர் அதே பகுதியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு அலங்காநல்லூர் தனிச்சியம் மெயின்ரோட்டை சேர்ந்த நேதாஜி (24), நரிமேடு சாலை முதலியார் தெருவை சேர்ந்த விஜயகுமார் (33), ஆரப்பாளையம் மேலமாரியம்மன் கோவில் தெரு அருள்ஜோ (43) ஆகியோர் வேலை பார்த்தனர்.

இவர்கள் கடையில் இருந்து போலியான ரசீது முறையில் பொருட்களை விற்பனை செய்தது கடையின் உரிமையாளருக்கு தெரிய வந்தது. இது குறித்து விசாரித்த போது சுமார் 22 லட்சத்து 35 ஆயிரத்து 260 ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலியான முறையில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த பொருட்களை எல்லாம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சாகுபர்சாதிக் (33) என்பவருக்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

3 பேர் கைது

இந்த மோசடி குறித்து மைக்கேல் அருள்ராயன் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நேதாஜி, விஜயகுமார், அருள்ஜோ ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்