திருட்டு வழக்கில் 3 பேர் கைது

செய்யாறில் திருட்டு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-07 17:46 GMT

செய்யாறு

செய்யாறு நேரு நகரை சேர்ந்தவர் கணேஷ். இவர் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலைவாணி சிப்காட் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி இரவு வழக்கம்போல் வீட்டினை பூட்டிக்கொண்டு மாடி பகுதியில் தூங்கினர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் வைத்திருந்த சுமார் 32 பவுன் நகை, வெள்ளி, ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் செய்யாறு இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், விஜயகுமார், தேசிங்கு, குணசேகரன் சன்னி லாயிட் ஆகியோர் கொண்ட தனிப்படை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இவ்வழக்கில் தொடர்புடைய கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் தாலுகா, திம்மலை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (41), அவரது நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா கீழ்செட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (27) மணிகண்டன் (37) ஆகிய 3 பேரை கைது போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 17 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளதால் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்