கஞ்சா கடத்திய 3 பேர் கைது

கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-27 18:45 GMT

கூடலூர், 

தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர்.அவரிடம் 20 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதேபோல் மேலும் 2 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம் தலா 50 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மசினகுடி அருகே உண்டி மாயாறை சேர்ந்த ராஜேஷ் (வயது 31), மசினகுடி குரூப் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (23), பிரதீஷ் (23) என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்