சாராயம் விற்ற 3 பேர் கைது

சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-03 19:00 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அகரஎலத்தூர் கிராமம் பெரிய தெருவை சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மனைவி பாரதி (வயது30), வடரங்கம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்த செந்தில் மனைவி லதா (50), அகரஎலத்தூர் கிராமத்தை ேசர்ந்த சேகர் மகன் சதீஷ்குமார் (30) ஆகிய 3 பேரும் வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சாராயம் விற்ற பாரதி, லதா, சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து, சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்