ராமநாதபுரத்திற்கு ரெயிலில் வந்த 2,620 டன் அரிசி

ராமநாதபுரத்திற்கு ரெயிலில் வந்த 2,620 டன் அரிசி

Update: 2022-12-13 18:45 GMT

ராமநாதபுரத்தில் மத்திய அரசு உணவு கழகத்தின் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் வெளி மாநிலங்களில் இருந்து ரெயிலில் கொண்டு வரப்படும் அரிசி, தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு மாநில அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் பொது வினியோக திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கபடுகிறது. மேலும் மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்ட பயனாளிகளுக்கு மாதந்தோறும் அரிசி, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. ஜார்கண்ட், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் இருந்து மாதந்தோறும் உணவு தானியங்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு பின்னர் தற்போது தெலுங்கானா மாநிலம் காசிமேட்டில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 42 ரெயில் பெட்டிகளில் 2,620 டன் அரிசி வந்துள்ளது. சுமார் 53 ஆயிரம் மூட்டைகளில் வந்துள்ள இந்த அரிசியை 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி மத்திய அரசு உணவு கழக சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்