116 மையங்களில் 25,776 பேர் தேர்வு எழுதுகின்றனர்

விருதுநகர் மாவட்டத்தில் இன்று 116 தேர்வு மையங்களில் 25, 776 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

Update: 2023-04-05 20:19 GMT


விருதுநகர் மாவட்டத்தில் இன்று 116 தேர்வு மையங்களில் 25, 776 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் இன்று முதல் 20-ந் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 51 தேர்வு மையங்களும், தனித்தேர்வுகளுக்கான 2 தேர்வு மையங்களும், சிவகாசி கல்வி மாவட்டத்திலும் 61 தேர்வு மையங்கள், 2 தனி தேர்வர்களுக்கான தேர்வு மையங்களும் அமைக்கப்பட உள்ளது.இந்த தோ்வினை 12,755 மாணவர்களும் 12,791 மாணவர்களும், 230 தனித்தேர்வர்களும் ஆக மொத்தம் 25,776 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

கண்காணிப்பாளர்கள்

இத்தேர்வுகளில் 120 முதன்மை கண்காணிப்பாளர்களும், 120 துறை அலுவலர்களும், 1,536 அறை கண்காணிப்பாளர்களும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சொல்வதை எழுதுபவர்களாக 163 ஆசிரியர்களும் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் 7 அமைக்கப்பட்டு 27 வழித்தட அலுவலர்கள் மூலம் 27 ஆயுதம் தாங்கிய போலீசார் உடன் அனைத்து தேர்வு மையங்களுக்கும் வினாத்தாள் அனுப்பப்பட உள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க 5 சிறப்பு பறக்கும் படைக்குழு மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

116 மையங்கள்

தேர்வுகள் நடைபெறும் 116 மையங்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் மாணவர்களின் நலன் கருதி தேர்வு மையங்களுக்கு சென்று உதவிட தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை மூலமாக அனைத்து வழித்தடங்களிலும் உள்ள தேர்வு மையங்களின் முன் பஸ்களை நிறுத்தி மாணவர்களை ஏற்றி இறக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்