விழுப்புரம் மாவட்டத்தில் 25,627 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வை 25,627 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

Update: 2023-04-05 18:45 GMT

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 121 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை, 364 பள்ளிகளை சேர்ந்த 13,006 மாணவர்களும், 12,621 மாணவிகளும் என மொத்தம் 25,627 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வின்போது மாணவர்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாத வண்ணம் இருக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தடையற்ற மின்சார வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்