ரூ.25 லட்சத்தில்பூங்கா புனரமைக்கும் பணி
திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் ரூ.25 லட்சத்தில் பூங்கா புனரமைக்கும் பணி நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
திருக்கோவிலூர்
முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட சந்தப்பேட்டை விஜயலட்சுமி நகர் பூங்கா புனரமைப்பு, விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் டி.என்.முருகன் தலைமை தாங்கி பூமி பூஜையை நடத்தி பணிகளை தொடங்கி வைத்தார். துணைதலைவர் உமாமகேஸ்வரிகுணா முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கீதா வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சக்திவேல், கோவிந்த், புவனேஸ்வரிராஜா, உஷாவெங்கடேசன், ஜெயந்திமுருகன், தமிழ்வாணிஅருள், நகர இளைஞர் அணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு ஒப்பந்ததாரர் எம்.கே.சங்கர் நன்றி கூறினார்.