குடோனில் பதுக்கிய 238 மது பாட்டில்கள் பறிமுதல்

குடோனில் பதுக்கிய 238 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-07-09 21:51 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு சுந்தரபாண்டியத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 236 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்ட ராஜா (வயது 40), சண்முகம் (41) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்