கடலூர் மாவட்டத்தில் தலைமறைவு குற்றவாளிகள் 230 பேர் கைது
கடலூர் மாவட்டத்தில் தலைமறைவு குற்றவாளிகள் 230 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் உள்ள விசாரணை வழக்குகளில் ஆஜராகாமல் இருக்கும் தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மேற்பார்வையில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 230 தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே போலீசார் தங்களை தேடுவது பற்றி அறிந்த 982 தலைமறைவு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.