பஸ் அதிபர் வீட்டில் 22 பவுன் நகைகள் திருட்டு

ஆரணியில் பஸ் அதிபர் வீட்டில் 22 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-23 13:10 GMT

ஆரணியில் பஸ் அதிபர் வீட்டில் 22 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜோதிடர்கள்...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தேனருவி நகரில் வசிப்பவர் செல்லப்பா (வயது 65), தனியார் பஸ் உரிமையாளர். இவரது மனைவி உமாமகேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இருவரும் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாகவே உமாமகேஸ்வரிக்கு தொடர்ந்து கண்ணில் பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் வீட்டை மாற்ற வேண்டுமென ஜோதிடர்கள் சொல்லியதின் பேரில் அருகாமையில் உள்ள வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். இதனால் அவரது வீட்டில் தினமும் காலை, மாலை இருவேளையும் தீபம் ஏற்றுவதற்கும், மின்விளக்கு சுவிட்ச் போடுவதற்கும் மட்டும் சென்று வருவார்கள்.

22 பவுன் நகைகள்

இந்த நிலையில் செல்லப்பா, வீட்டுக்கு வந்து பார்க்கும் போது கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருப்பதை கண்டார். உள்ளே சென்று பார்க்கும் போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோக்கள் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 22 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.7½ லட்சம் இருக்கும். இதுகுறித்து ஆரணி நகர போலீசில் செல்லப்பா கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பி.புகழ், சப் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்