சென்னையில் 21 ஆயிரம் ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்: அமைச்சர் சேகர்பாபு

சென்னையில் மழை பாதிப்புகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

Update: 2023-11-30 05:39 GMT

சென்னை,

சென்னையில் நேற்று முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை, யானைக்கவுனி பகுதிகளில் மழை பாதிப்புகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

"தொடர் மழையால் ஒரு சில தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 21 ஆயிரம் ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. முதல் அமைச்சரின் உத்தரவின்படி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் செயலாற்றி வருகின்றோம்." இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்