பரிகாரம் செய்வதாக ரூ.21 ஆயிரம் மோசடி
பரிகாரம் செய்வதாக ரூ.21 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கையை அடுத்த மதுகுபட்டி அருகே உள்ள கீழ அம்மச்சி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேவுகன். இவருடைய மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சம்பவத்தன்று இவருடைய மருமகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த குறி பார்க்கும் நபர் ஒருவர் ஆண் வாரிசு பெறுவதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி ரூ.21 ஆயிரம் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தஞ்சாவூரை அடுத்த பொன்னன் தோப்பு குடியிருப்பு புதூரை சேர்ந்த கர்ணன் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.