2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பது உறுதி - எடப்பாடி பழனிசாமி
சிறுபான்மை மக்களின் மனநிலை எதிர்காலத்தில் மாறும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.;
சென்னை,
சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நாகை, மயிலாடுதுறை நிர்வாகிகள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
"அதிமுக தொண்டர்கள் யாரும் துவண்டுவிட வேண்டாம். கூட்டணி குறித்து கவலை வேண்டாம். வலுவான கூட்டணியை அமைக்க தலைமை முடிவுசெய்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணியை அமைக்கும்.
சிறுபான்மை மக்களின் மனநிலை எதிர்காலத்தில் மாறும். சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம். சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை தங்கள் பக்கம் திருப்புவதற்கான முயற்சிகளை அதிமுகவினர் மேற்கொள்ள வேண்டும்."
இவ்வாறு அவர் பேசினார்.