கூட்டுறவுத்துறை சார்பில் நவீன செக்கு எண்ணெய் ஆலை முதல் அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
கூட்டுறவுத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள நவீன செக்கு எண்ணெய் ஆலையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி
புதுவை மைய கூட்டுறவு விற்பனை வினியோக சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள நவீன அரிசி ஆலை வளாகத்தில் புதிய நவீன செக்கு எண்ணெய் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. அதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை செயலாளர் மலர்கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் முகமது மன்சூர், புதுவை மைய கூட்டுறவு விற்பனை வினியோக சங்க நிர்வாகி ராகிணி, மேலாண் இயக்குனர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலையில் சுத்தமான மணிலா மற்றும் எள்ளை அரைத்து எண்ணெய் தயார் செய்து விற்பனை செய்யப்படுவதும், மணிலா உடைத்தும், எள் சலித்தும், அரைத்தும் கொடுக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.