“திமுக இந்து மதத்திற்கு எதிரிகள் இல்லை” - அமைச்சர் சேகர் பாபு

திமுக இந்து மதத்திற்கு எதிரிகள் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

Update: 2022-05-04 10:35 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சார்பில் அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-

திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல; ஆன்மீக அரசு. திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல; தீபமாய் ஒளி தரும் திரி. இந்து சமய அறநிலையத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி காலம் பொற்காலமாக இருக்கும்.

ராமேஸ்வரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 3 திருக்கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும். அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும். திமுக ஆட்சி முடிவதற்குள் 15 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு பணி நிறைவடையும்.

8 கோவில்களில் யானைகளுக்கான குளியல் தொட்டிகள் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்படும். 10 கோவில்களில் முதற்கட்டமாக உயிரிழந்த யானைகளுக்கு நினைவு மண்டபங்கள் அமைக்கப்படும். 

5 சிவாலயங்கள் சார்பாக மகா சிவராத்திரி விழா நடத்தப்படும். 121 கோவில்களில் பராமரிக்கப்பட்டு வரும் பசு மடங்கள் ரூ.20 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக பழனி மலைக்கும் - இடும்பன் மலைக்கும் இடையே ரோப்கார் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்