குடிநீர் தொட்டியில் குளியல் போடும் குரங்குகள்....!
தக்கலை அருகே கோடை வெயிலின் காரணமாக குடிநீர் தொட்டியில் குரங்குகள் குளியல் போட்டு வருகின்றனர்.
தக்கலை,
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வன விலங்குகள் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கவும் தாகத்தை தீர்க்கவும் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த பத்மநாபபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள குரங்கு கூட்டம் அந்த பகுதியில் உள்ள வீட்டு மாடியில் ஏறி அங்கிருந்த குடிநீர் தொட்டியில் புகுந்து ஆனந்தமாக குளியல் போட்டு வருகின்றது.
இதை அவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் இப்பகுதியில் அதிகமாக குரங்கு தொல்லைகள் இருப்பதால் வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.