மதுரவாயலில் போதை மாத்திரை விற்பனை - கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது...!

மதுரவாயலில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-24 04:15 GMT
போரூர்,

சென்னை மதுரவாயல் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக அண்ணா நகர் துணை கமிஷனர் சிவபிரசாத்க்கு தகவல் கிடைத்தது.   

இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை சீமாத்தம்மன் நகரில் சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

அவர்கள் அதே பகுதி பாக்யலட்சுமி நகரை சேர்ந்த குகன் (20) மற்றும் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் (20) என்பது தெரிந்தது மேலும் அவர்களது பையை சோதனை செய்ததில் அதில் "டைடால்" எனும் போதை மாத்திரை மற்றும் ஊசி மருந்துகள் பதுக்கி வைத்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. 

தனியார் கல்லூரி மாணவர்களான குகன், கிஷோர்குமார் இருவரும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து போதை மாத்திரைகள் வரவழைத்து அதை உடன் படிக்கும் நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது. 

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 91 போதை மாத்திரைகள், 4 ஊசி மருந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்