அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிறுவர் பூங்கா நாளை முதல் திறப்பு...!

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிறுவர் பூங்கா நாளை முதல் திறக்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.;

Update: 2022-04-21 14:56 GMT
சென்னை,

பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்ட 7 பார்வையாளர்கள் காணும் இருப்பிடங்கள் படிப்படியாக பார்வையாளர்களுக்காக திறக்கப்படும். 

இந்த நிலையில் நாளை (22.04.2022) வெள்ளிக்கிழமை முதல் பாம்புகள் இருப்பிடம் ஊர்வன இல்லம், இரவு விலங்குகள் இருப்பிடம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவை முதல் கட்டமாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பொதுமக்களுக்கு திறக்கப்படுகின்றது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்றான சிறுவர் பூங்கா வார நாட்களில் மட்டும் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும். 

வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும்  பொது விடுமுறை நாட்களில் சிறுவர் பூங்காவிற்கு அனுமதியில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்