திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-04-19 05:06 GMT
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.  

இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர். என். ரவி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு இன்று வந்தார். அவருக்கு கோவில்  நிர்வாகம் மற்றும் சிவாச்சாரியார்கள் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கவர்னர் கோவிலுக்கு சென்று முதலில் கஜ பூஜையும், கோபூஜையும் செய்தனர். பின்னர் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சாமி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் நடைப்பெற்றது.

இதற்கிடையில், தருமபுரம் ஆதினத்திற்கு கவர்னரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்