மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன நிகழ்வில் தமிழக கவர்னர் பங்கேற்க எதிர்ப்பு - கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக கவர்னருக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-04-19 04:36 GMT
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்க இன்று மயிலாடுதுறைக்கு சென்றார்.

இந்நிலையில் ,அவரது வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட  16 அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆதினம் நோக்கி கவர்னர் வாகனம் செல்லும் சாலைமுன் திரண்ட நூற்றுக்கணக்கானோர் கவர்னரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதில் சற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

மேலும் செய்திகள்