“அண்ணா நூலகம்” சென்ற அனுபவம் குறித்து ப.சிதம்பரம் டுவீட்

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்கு தான் சென்ற அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Update: 2022-04-16 17:14 GMT
சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்கு தான் சென்ற அனுபவம் குறித்து, தனது  டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்,

 'சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்றேன் உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ளன போல் நாம் பெருமைப்படக்கூடிய நூலகம் இங்கு இல்லாத நூல்களே இருக்க முடியாது என்று கூறும் அளவிற்குத் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வியக்க வைத்தன.

எல்லாக் குடும்பங்களும் ஒரு முறை குழந்தைகளுடன் விஜயம் செய்ய வேண்டிய அறிவுக் கூடம். புத்தாண்டில் மனம் நிறைந்து மகிழ்ச்சி அடைந்தேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்