விண்ணப்பிக்கும் அனைவருக்கும் புனித ஹஜ் பயணத்துக்கு அனுமதி

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் புனித ஹஜ் பயணத்துக்கு அனுமதி அபுபக்கர் தகவல்.

Update: 2022-04-15 18:49 GMT
சென்னை,

ரமலான் பெருவிழாவை முன்னிட்டு 3 ஆயிரம் நலிந்த இஸ்லாமியர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் சென்னையில் இருந்து நேரடியாக செல்ல விமான சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த வாரம் அதற்குரிய அனுமதி கிடைத்துவிடும் என்றும் கூறினார். மேலும், இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வருகிற 22-ந் தேதி வரை ஹஜ் பயணம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரும் நமக்கு தொப்புள் கொடி உறவுகள் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்