சக்தி சாமுண்டீஸ்வரி அம்மன் ேகாவில் திருவிழா

நாட்டறம்பள்ளி அருகே அக்ரகாரம் சக்தி சாமுண்டீஸ்வரி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-04-13 18:11 GMT
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே அக்ரகாரம் சக்தி சாமுண்டீஸ்வரி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த அக்ராகரம் கிராமத்தில் ஏரிக்கரையில் உள்ள சக்தி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா மற்றும் சடல் மரம் சுற்றும் சிறப்பு நிகழ்ச்சி 17-ந்தேதி நடக்கிறது. ேகாவில் திருவிழா ேநற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று அதிகாலை 4.30 மணியளவில் சக்தி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்புப் பூஜை, காலை 7.30 மணிக்கு அம்மன் கொடியேற்றத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. 

நேற்று கூழ்வார்த்தல் மற்றும் பெண்கள் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. வருகிற 17-ந்தேதி மாலை 5.30 மணியளவில் கோவில் அருகில் பக்தர் ஒருவர் முதுகில் 6 அலகுகள் குத்தி சடல் மரம் சுற்றும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு வாண வேடிக்கை, திரைப்பட நடன கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அக்ராகரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சவிதாதேவன், ஊராட்சி மன்ற துணைத் சாமுடி, தர்மகர்த்தா மகாவிஷ்ணு மற்றும் விழாக்குழுவினர் மற்றும் கிராம ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்