கல்லூரி மாணவி தற்கொலை
செல்போனில் அதிக நேரம் பேசியதை கண்டித்ததால் மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார்.
புதுவை சாரம் ஞானபிரகாசம் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மகள் லோகேஸ்வரி (வயது 21), 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் செல்போனில் அடிக்கடி யாருடனோ அதிக நேரம் பேசிக்கொண்டுள்ளார்.
இதை அவரது குடும்பத்தினர் கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். உடனே அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், பலனின்றி லோகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.