இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது- கேரள முதல் மந்திரி பினராயி விஜயன்

இந்தி திணிப்பு என்பது தேசிய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் சிதைக்கும் முயற்சி என பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Update: 2022-04-09 16:19 GMT
கண்ணூர்,

கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பேசுகையில் கூறியதாவது;- 

இந்தி திணிப்பு என்பது தேசிய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் சிதைக்கும் முயற்சி. இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.நாட்டின் முக்கிய எதிர்பார்ப்பு மையமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்” என்றார். 

மேலும் செய்திகள்