ஓசூரில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் - வனத்துறையிடம் ஒப்படைப்பு

காரில் இருந்த 19 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2022-04-07 23:04 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மத்திகிரி டைட்டன் டவுன்ஷிப் பகுதியில், கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட இரண்டு கார்கள் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த கார்களை சோதனை செய்த போது, அதில் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. அந்த காரில் இருந்த 19 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்