கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்

மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கொத்தானாருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-04-07 18:02 GMT
அரியாங்குப்பம் அடுத்துள்ள காக்காயந்தோப்பு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் துளசிங்கம் (வயது 49), கொத்தனார். சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் கோவில் திருவிழாவில் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்றார். அப்போது தனது மோட்டார் சைக்கிளை ஐஸ் பிளாண்ட் எதிரே நிறுத்தியிருந்தார். அதன் அருகில் நிறுத்தியிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த 3 பேர், துளசிங்கத்திடம் தகராறு அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் துளசிங்கம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துளசிங்கத்தை தாக்கிய வீராம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த முகிலன், அமுல், யுனே  ஆகிய 3 பேரையும்  வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்