தென்காசி: மத்தளம் பாறை வனப்பகுதியில் தீ விபத்து...!
மத்தளம் பாறை வனப்பகுதியில் பற்றிய தீயை வனத்துறையினர் அணைத்து வருகின்றனர்.
கடையம்,
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மத்தளம் பாறை வனப்பகுதியின் கெண்டி ஊத்து என்ற இடத்தில் ஏற்பட்ட மின்னல் காரணமாக தீ பற்றியது.
இந்த தீ காற்றி காரணமாக வேகமாக பரவி வருகின்றது. இதனால் மெற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள உயிரினங்களும், அறிய வகை தாவரங்களும் அழியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதன் பாதிப்பை உணர்ந்த வனத்துறையினர், பற்றி எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
மத்தளம் பாறை வனப்பகுதியில் பற்றி உள்ள காட்டு தீயை அணைக்கும் பணியில் 40-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மலை பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் ஒரு புறம் தீயை அணைத்தாலும், மறுபுறம் தீ வேகமாக பரவி வருகின்றது.
இதனல் தீயை அணைக்கும் முயற்சி கடும் சவாலாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.