தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
ஆன்லைனில் சூதாட்டம் விளையாடியதை மனைவி கண்டித்ததால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
முத்தியால்பேட்டை சின்னையாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் விஜயன் கடந்த 2 நாட்களாக மது குடித்துவிட்டு ஆன்லைனில் சூதாட்டம் (ரம்மி) விளையாடிக் கொண்டிருந்தார். இதனை மனைவி பிரியா கண்டித்தார். இதனால் மனமுடைந்த விஜயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.