45 அடி உயர கொடிக் கம்பத்தில் கொடியேற்றினார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்..!
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தில் 45 அடி உயர கொடிக் கம்பத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியேற்றினார்.
புதுடெல்லி,
டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில், திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 30-ம் தேதி டெல்லி வந்தார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
டெல்லியில் இன்று மாலை திமுக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. திமுக தலைவரும் முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின், திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில், கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர கொடிக் கம்பத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக கொடியை ஏற்றினார்.