கோவில்களுக்கு வருவாயை பெருக்க ரூ.50 கோடியில் ஒருங்கிணைந்த வணிக வளாகம்

கோவில்களுக்கு வருவாயை பெருக்க ரூ.50 கோடியில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைச்சர் சேகர்பாபு தகவல்.

Update: 2022-03-31 18:59 GMT
சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமையில் சென்னை மண்டல கமிஷனர்களுடன் சீராய்வு கூட்டம் நடந்தது. கமிஷனர் ஜெ.குமரகுருபரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழுதான தேர்கள் சீர்செய்யவும், தேர்வலம் வரும் மாடவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவது, கோவில்களில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்வது, கோவில்களில் உள்ள பசுமடம் பராமரிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வடபழனி முருகன் கோவில், திருவொற்றியூர் தியாகராஜசாமி கோவில் மற்றும் எழும்பூர் சீனிவாசபெருமாள் கோவில்களின் வருவாயை பெருக்கும் வகையில் ரூ.50 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது,

தேவி பாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் கோவில் மூத்த குடிமக்களுக்கு உறைவிடங்கள் தொடங்குதல் ஏகாம்பரேசுவரர் கோவில் சார்பில் அர்ச்சகர்கள் குடியிருப்புகள் கட்டுதல், பாதாளபொன்னியம்மன் கோவில் புதிய தேர் அமைக்கும் பணிகள், மாதவரம் கைலாசநாதர் கோவிலுக்கு புதிய தெப்பக்குளம் ரூ2.22 கோடி மதிப்பீட்டில் தொடங்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்